பெரும்பாலும் பெயிண்டுகள் வாங்கும்போது அதன் விவரகுறிப்பீடுகளை கேட்டறிந்து வாங்க முற்படும் நாம், சுவர்பட்டியை பற்றி பெரிதும் ஆராய்வதில்லை. பொதுவாக, முன்னணி பிராண்டின் தயாரிப்புகள் சிறந்த தரத்துடன் இருக்கும் என்று எண்ணும் நாம், தயாரிப்பின் விவரக்குறிப்பீடுகள் மற்றும் இதர பண்புகளில் கவனம் செலுத்துவதில்லை. சுவர்பட்டி பல்வேறு பண்புகளை கொண்டது. பிராண்டிற்கு பிராண்டு இவை மாறக்கூடியவை. தரமற்ற சுவர்பட்டியை தேர்ந்துதெடுப்பது கட்டிடத்தின் பெயிண்டிங்கை முற்றிலுமாக வீணாக்கக்கூடும்.
எனவே சுவர்பட்டி வாங்குவதற்கு முன் நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை என்ன என்பன இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
- ஓட்டுதல் வலிமை: தரமான சுவர்பட்டி எளிதில் பூசப்படும் பரப்புடன் நன்கு ஒட்டிக்கொள்ளும்.
- அமுக்கு வலிமை: தரமான சுவர்பட்டி பூசப்பட்ட பரப்பில் ஏற்படும் அமுக்கு விசையை தாங்கும் திறன் பெற்றது.
- காற்று உட்புகும் தன்மை: தரமான சுவர்பட்டி சிறந்த காற்று உட்புகும் தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்
- நீர் உட்புகாத தன்மை: தரமான சுவர்பட்டி நன்றாக உலர்ந்த பின்னர் நீரை உட்புகவிடாமல் தடுத்து சுவர் சிதைந்து போகாமல் பாதுகாக்கும்.
- மென்மையான பூச்சு: தரமான சுவர்பட்டி நன்றாக உலர்ந்த பின்னர் மிருதுவான மேற்பரப்பினை அளிக்கும்.
- அதிக பரப்பு: அதிக பரப்பளவிற்கு பூச்சு கிடைக்க வேண்டும்.
- பேக்கிங் தரம்: தரமான பேக்கிங் பைகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட சில பண்புகளை நேரடியாக பயன்படுத்தி பார்க்காமலோ அல்லது ஆய்வகங்களில் சோதனை செய்து பார்க்காமலோ அளவிட முடியாது. ஆனால் பல பண்புகளை சுவர்பட்டியின் விவரக்குறிப்புகளைக் கொண்டு அளவிடவும் மதிப்பிடவும் முடியும். மேலும் உங்கள் பெயிண்டிங் காண்ட்ராக்டர் மேற்கூறிய அனைத்து திறன்களையும் மதிப்பிட தெரிந்திருக்க வேண்டும்.
வேலை செய்யும் இடத்தில கவனிக்க இயலாத மற்ற முக்கியமான பண்புகள் உள்ளன. அவை இழுவிசை, ஓட்டும் தன்மை, அமுக்கும் வலிமை மற்றும் நீர் உட்புகாத தன்மை. பொதுவாக இந்திய தயாரிப்பாளர்கள் சிங்கப்பூர் நாட்டின் ஹவுசிங் மற்றும் டெவலப்மென்ட் போர்டின் பண்புகளை குறிப்பிடுகின்றனர். வாடிக்கையாளர், இந்த பண்புகளை தயாரிப்பாளரின் இணையதளம் அல்லது பேக்கிங் அச்சிடப்பட்டுள்ள குறிப்புகளை பார்த்து அறிந்துகொள்ளலாம். அதிக அளவில் சுவர்பட்டி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதனை தானாகவே வாங்கி ஒரு அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து அவற்றின் சராசரி மதிப்புகளை கொண்டு சிறந்த பிராண்டை தீர்வு செய்ய வேண்டும்.
உங்கள் இனிய ஷாப்பிங் அணுபவத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்!